/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிளப்பில் சூதாட்டம் புகார்; ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
/
கிளப்பில் சூதாட்டம் புகார்; ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
கிளப்பில் சூதாட்டம் புகார்; ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
கிளப்பில் சூதாட்டம் புகார்; ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 18, 2025 12:30 AM
திருப்பூர்; திருப்பூர் கிளப்பில் சூதாட்டம் நடப்பது தொடர்பான புகாரில், மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்து, இரு வாரங்களுக்கு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்- - அவிநாசி ரோட்டில், பங்களா ஸ்டாப் அருகே திருப்பூர் கிளப் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம், கிளப்பில், பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக, தகவல் வெளியானது. மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட கிளப்பில் போலீசார் சோதனை செய்தனர். அதில், 3.29 லட்சம் ரூபாய், நம்பர் குறிப்பிட்ட ஏராளமான டோக்கன்களை பறிமுதல் செய்து, கிளப் மேலாளர் ராமநாதன் என்பவரை கைது செய்தனர்.
போலீசார் சோதனையின் போது, யாரும் இல்லை. அதே நேரத்தில், அங்கிருந்த பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் பணத்தை செலுத்தி டோக்கன் பெற்று கொள்ளவும் என்று வைத்துள்ள அறிவிப்பு போன்றவை, பணம் வைத்து சூதாட்டம் நடந்து இருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியது. 'சூதாட்டம் என்பது தவறான தகவல். முன்னாள் நிர்வாகி செல்வம் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் விளக்கம் அளிக்காமல், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக,' என கிளப் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கிளப்பின் முன்னாள் நிர்வாகி செல்வம் கிளப்பில், சூதாட்டம் நடப்பதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அதில், 'கிளப்பில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடக்கிறது. கிளப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிளப்பில் சூதாட்டம் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்து, இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க பத்திரப்பதிவு துறை தலைவர் மற்றும் திருப்பூர் மாவட்ட பதிவாளருக்கும்,' நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.