ADDED : அக் 02, 2025 11:36 PM

திருப்பூர்:காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி திருப்பூர் மாநகராட்சி சார்பில், அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கமிஷனர் அமித், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். மாநகர் நல அலுவலர் முருகானந்த், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ., மரியாதை காந்தி பிறந்த நாள், லால் பகதுார் சாஸ்திரி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் கருவலுாரில் காந்தி, லால்பகதுார் சாஸ்திரி, காமராஜர் ஆகியோர் படங்களுக்கு மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய தலைவர் பிரபு ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர்கள் நிசோக், பெரியசாமி, கேந்திர பொறுப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எழுத்தாளர் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின், திருமுருகன்பூண்டி கிளை சார்பில், காந்தி ஜெயந்தி விழா, பூண்டி நகராட்சி அலுவலக முகப்பில் உள்ள காந்தி சிலை அருகில் நடந்தது. சிலைக்கு மாலை அணிவித்து, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியேற்றனர்.சங்கத்தின் பூண்டி கிளை தலைவர் ஈஸ் வரன், கிளை செயலாளர் காமராஜ், 10வது வார்டு உறுப்பினர் சுப்ரமணியம், சிற்பக்கலைஞர் சண்முகம், பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.