/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராமர் நாட்டிய நாடகம் அரங்கேற்றம்
/
ராமர் நாட்டிய நாடகம் அரங்கேற்றம்
ADDED : அக் 02, 2025 11:35 PM

திருப்பூர்:திருப்பூரில், அருணாச்சல கவிராயரின் ராம நாடகம் அரங்கேறியது.திருப்பூர், சாய் கிருஷ்ணா நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில், விஜய தசமியை முன்னிட்டு, அருணாச்சல கவிராயரின் புகழ்பெற்ற படைப்பான ராம நாட்டிய நாடக அரங்கேற்றம், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
'இலக்கிய கதையை சுவையாக மக்களுக்குச் சொல்வதற்கு கீர்த்தனைகள் ஏற்றன' என்பதை நிரூபிக்கும் வகையில், வகையில், அருணாசலக் கவிராயர் 'ராம நாடக கீர்த்தனை' எழுதியுள்ளார்.இந்த ராம நாடக கீர்த்தனைகளை பரதக்கலையின் வாயிலாக, கலைஞர்கள் அரங்கேற்றினர்.
நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் வேடம், உடை தரித்த கலைஞர்கள், பின்னணி இசை மற்றும் பாடலுக்கு ஏற்ப, நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை சாய் கிருஷ்ணா நுண்கலை பயிற்சி பள்ளி கலை இயக்குனர் சந்தியாசங்கர் செய்திருந்தார்.