/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலை கரைப்பு; 7 இடங்களில் அனுமதி
/
விநாயகர் சிலை கரைப்பு; 7 இடங்களில் அனுமதி
ADDED : ஆக 21, 2025 11:27 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், ஏழு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. மூன்று நாட்களுக்குப்பின், சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது, பாதுகாப்பு நெறிமுறைகள், விசர்ஜன ஊர்வலம் தொடர்பான வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை ஏழு நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால், பொங்கலுார் பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், எஸ்.வி., புரம் வாய்க்கால், பி.ஏ.பி., வாய்க்கால், கணியூர் அமராவதி ஆறு, கொடி மேடு பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய இடங்களில் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதி அளித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.