/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுாரில் விநாயகர் சிலை ஊர்வலம்
/
பெருமாநல்லுாரில் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : ஆக 31, 2025 12:47 AM

பெருமாநல்லுார் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், பெருமாநல்லுர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 19 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.
சிலை வைக்கப்பட்ட இடங்களில் இருந்து, விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு, வாகனத்தில் பெருமாநல்லுார் நால் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பின், ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் குறிஞ்சி சேகர் துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலம் பாண்டியன் நகர், போயம்பாளையம், பிச்சம்பாளையம் வழியாக திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. முன்னதாக, ஊர்வலத்தின் முன்பு ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியன நடைபெற்றது.

