/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன ஓட்டிகளிடம் பணம், நகை பறிக்கும் கும்பல்; தேசிய நெடுஞ்சாலையில் அட்டூழியம்
/
வாகன ஓட்டிகளிடம் பணம், நகை பறிக்கும் கும்பல்; தேசிய நெடுஞ்சாலையில் அட்டூழியம்
வாகன ஓட்டிகளிடம் பணம், நகை பறிக்கும் கும்பல்; தேசிய நெடுஞ்சாலையில் அட்டூழியம்
வாகன ஓட்டிகளிடம் பணம், நகை பறிக்கும் கும்பல்; தேசிய நெடுஞ்சாலையில் அட்டூழியம்
ADDED : ஏப் 03, 2025 05:47 AM

பல்லடம்; பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டி, பணம், நகைகளை பறிக்கும் கும்பலால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்லடம் நகரப் பகுதி வழியாகவும், பொங்கலுார், மாதப்பூர், கே.என்.புரம், காரணம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வழியாகவும் செல்கிறது. கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலை என்பதால், இவ்வழியாக, கன்டெய்னர்கள், டிப்பர் லாரிகள், கறிக்கோழி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், இரவு நேர வழிப்பறி கும்பல் அதிகரித்துள்ளது.
நோட்டமிடும் கும்பல்
தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிலர், இயற்கை உபாதைகளுக்காகவும், ஓய்வெடுக்கவும் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
வாகனங்களை நிறுத்திச் செல்பவர்களை நோட்டமிடும் வழிப்பறி கும்பல், வாகன ஓட்டிகளை மறைந்திருந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, பணம், நகை, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது.
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளே இதனால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
போலீசாரிடம் சென்றாலும் இதற்கு உரிய தீர்வு கிடப்பதில்லை என்பதால், பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகின்றனர். புகார்களும் வராத நிலையில், இரவு நேர வழிப்பறி கும்பலின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
கண்காணிப்பு அவசியம்
முந்தைய பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக, இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இல்லாமல் வாகன ஓட்டிகள் தைரியமாக பயணித்து வந்தனர்.
இவர் பணி மாறுதல் பெற்று சென்ற பின், மீண்டும் பழைய நிலை திரும்பி விட்டது. இதனால், இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக் கும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன்தான் பயணிக்க வேண்டி உள்ளது.
எனவே, ரோந்து போலீசார், இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மறைந்திருந்து தாக்கும் இரவு நேர வழிப்பறி கும்பலை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.