ADDED : அக் 10, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்தவர், 48 வயது மதிக்கத்தக்க நபர். சில நாட்கள் முன், வாட்ஸாப்பில் எஸ்.எம்.எஸ்., வந்தது. தொடர்ந்து, வாட்ஸாப் குழுவில் இணைக்கப்பட்டார். அதில், பேசிய பெண் ஒருவர், பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், அதிகப்படியான லாபம் பெறலாம் என்று கூறினார்.
இதை நம்பிய அவர், லிங்க் மூலம் சென்று கணக்கை துவக்கினார். பல்வேறு தவணைகளாக, எட்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அந்த பணத்தை லாபத்துடன் எடுக்க முயன்ற போது, கூடுதலாக பணம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். பின், ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.