நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், கஞ்சம்பாளையம், ராதா நகரை சேர்ந்தவர் முருகேசன், 35; சாய ஆலை மேலாளர். திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளது. மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.சில மாதம் முன், ஆன்லைன் ஆப் மூலமாக முருகேசன் கடன் பெற்றிருந்தார்.
இந்த பணத்தை, சீட்டு போட்டிருந்த பணத்தை எடுத்து, வட்டியுடன் கட்டினார். மீண்டும் பணத்தை கட்ட கூறி, மொபைல் போனுக்கு அழைப்புகள் வந்தது. இதனால், மனமுடைந்து இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். இறப்புக்கான காரணம் என்னவென்று திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.