/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பைக்கிடங்கில் தீ புகைமூட்டம்; அவதி
/
குப்பைக்கிடங்கில் தீ புகைமூட்டம்; அவதி
ADDED : பிப் 18, 2025 11:57 PM

திருப்பூர்; காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தக்காடையூர் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சந்தைப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.
குப்பைக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. இரு நாட்களுக்கு முன், குப்பை கிடங்கில் தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் அணைத்த நிலையில், முழுமையாக அணையாமல், குப்பையில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது.
இந்த புகைமூட்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து உள்ளது. இதனால், மக்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த குப்பை கிடங்கு, ஈரோடு - பழநி ரோட்டில் உள்ளதால், துர்நாற்றத்துடன் வெளியேறும் புகையால், அந்த ரோட்டில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளது.

