/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பாறு ஓடையில் குவியும் கழிவுகள்
/
உப்பாறு ஓடையில் குவியும் கழிவுகள்
ADDED : அக் 21, 2024 06:13 AM

உடுமலை : உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், பெரியபட்டி கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில், உப்பாறு ஓடையின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு பகுதியில் இருந்து மாநில நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் இரவு நேரங்களில், பழைய பாலத்திலிருந்து ஓடையில் கழிவுகளை வீசிச்செல்வது அதிகரித்துள்ளது.
தற்போது அப்பகுதியில் டன் கணக்கில் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், மழைக்காலத்தில், ஓடையில் தண்ணீர் செல்வது தடைபடும் நிலை உள்ளது.
இதே போல், மாநில நெடுஞ்சாலையையொட்டி பல்வேறு இடங்களில், இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு, பின்னர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பல்வேறு ஓடைகளில் கழிவுகள் கொட்டுவது அதிகரித்தும் குடிமங்கலம் போலீசார், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பல ஓடைகள் குப்பை கிடங்காக மாறி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.