/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதி சந்திப்பில் குப்பை... வீணாகும் குடிநீர்!
/
வீதி சந்திப்பில் குப்பை... வீணாகும் குடிநீர்!
ADDED : நவ 11, 2025 12:41 AM

இதுவா இடம்? திருப்பூர், காந்தி நகர், 80 அடி ரோடு சந்திப்பில் மாநகராட்சி ஊழியர்களே குப்பை கொண்டு வந்து கொட்டுகின்றனர். தேங்கும் குப்பையை அள்ள வேண்டும். - சித்து, காந்திநகர். முட்புதர் மயம் திருப்பூர், மிலிட்டரி காலனி முதல் வீதியில் சாலையை ஆக்கிரமிக்கும் அளவுக்கு முட்புதர் வளர்ந்து விட்டது. சுத்தம் செய்ய வேண்டும். - வின்சென்ட்ராஜ், மிலிட்டரிகாலனி.
n அவிநாசி - சேவூர் வழி, சந்தையபாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம் பராமரிப்பு இல்லாமல், முட்புதர் நிறைய வளர்ந்து காணப்படுகிறது. சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். - சின்னா, சேவூர். துார்வாரலாமே! அவிநாசி, ஆத்துப்பாளையம் அடுத்த பாரதியார் நகரில் கிணறு பராமரிப்பு இல்லாமல், சுற்றிலும் முட்செடி, புதர் வளர்ந்து காணப்படுகிறது. துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும். - அன்பு, பாரதியார் நகர். வீணாகும் தண்ணீர் திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் வீணாகி, சாலையே குழியாகி விட்டது.
விபத்து ஏற்படும் முன் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். - அபித், பங்களா ஸ்டாப். குழியை மூடுங்க! வெள்ளகோவில் - முத்துார் ரோடு, ஆர்.ஆர். காம்ப்ளக்ஸ் முன்புற வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும். - பூபதிராஜா, வெள்ளகோவில்.

