/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை' கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
/
'பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை' கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
'பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை' கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
'பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை' கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
ADDED : நவ 11, 2025 12:42 AM

திருப்பூர்: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில், மண்பாண்ட தொழிலாளர்கள், கையில் மண்பானை மற்றும் அடுப்பு ஏந்தியவாறு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின், கூறியதாவது:
அரசு, பொங்கல் பண்டிகைக்காக, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச அரிசி, கரும்பு, வேட்டி, சேலை ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குகிறது.
புதுப்பானையில் பொங்கல் வைக்க, பரிசு தொகுப்பில், மண் பானையும், அடுப்பும் வழங்கவேண்டும் என, ஐந்து ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல், பானை மற்றும் அடுப்பு வழங்க உத்தரவு பிறப்பித்து, எங்கள் தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும்.
பருவமழைக் காலங்களில் மண்பாண்டம் உற்பத்தி தொழில் செய்ய முடிவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மழைக்கால நிவாரணமாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்த, 20 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
பெரும்பாலானோருக்கு, பருவமழை கால நிவாரண உதவித்தொகை கிடைப்பதில்லை. மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவின் மகத்துவம் குறித்த பாடங்களை, பள்ளி பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

