/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதிரியக்கவியல் தின கருத்தரங்கம்
/
கதிரியக்கவியல் தின கருத்தரங்கம்
ADDED : நவ 11, 2025 12:43 AM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாநில அளவிலான கதிரியக்கவியல் தின கருத்தரங்கம் நடந்தது.
நவ. 7ல், சர்வதேச கதிரியக்கவியல் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கதிரியக்கவியல் துறை சார்பில், சர்வதேச கதிரியக்கவியல் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக,' கதி ரியக்க இமேஜிங் மாநாடு - 2025' எனும் தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
மாநிலம் முழுதும், 30க்கும் அதிகமான கல்லுாரிகளை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கதிரியக்கவியல் துறையின் புதிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நிகழ்ச்சிக்கு, மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர் பத்மினி, கல்லுாரி துணை முதல்வர் கவுரிசங்கர், கதிரியக்கவியல் துறை டாக்டர்கள் கலைவாணி, சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்த, கதிரியக்கவியல் விஞ்ஞானி வில்ஹெம் கான்ராட் ரோன்ட்ஜென் நினைவாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. கோவை, பி.எஸ்.ஜி. கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசும், பாராட்டும் பெற்றனர். இரண்டாம் பரிசை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிஅணி பெற்றது.

