/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை; மறியல் முயற்சியால் 'மாயம்' ஆனது
/
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை; மறியல் முயற்சியால் 'மாயம்' ஆனது
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை; மறியல் முயற்சியால் 'மாயம்' ஆனது
சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை; மறியல் முயற்சியால் 'மாயம்' ஆனது
ADDED : ஆக 06, 2025 10:59 PM

அனுப்பர்பாளையம்; குப்பைகள் கொட்டப்பட்டு போக்குவரத்து மற்றும் சுகாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து, மறியலில் ஈடுபட மக்கள் திரண்டதால், குப்பைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அகற்றினர்.
திருப்பூரில் தினசரி 700 முதல் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இவை பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுவதால், குப்பை கொட்ட இடமின்றி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், மாநகரில், குப்பை எடுக்கப்படாமல் ஆங்காங்கே மலைபோல் குப்பை தேங்கி வருகிறது. முப்பதாவது வார்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பூம்புகார் நகர் அருகே பேப்ரி கேஷன் ரோட்டோரம் தேக்கிவைத்தனர். மலைபோல் குவிந்த குப்பையால் ரோடு அடைக்கப்பட்டது. அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது; குடியிருக்க முடியவில்லை. நோய் பரவும் அபாயம் உள்ளது. ரோடு அடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பூம்புகார் நகர் பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்த வடக்கு போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். பின், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து தேக்கி வைக்கப்பட்ட குப்பைகளை அங்கிருந்து லாரி மூலம் அப்புறப்படுத்தினர்.