/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்குகிறது குப்பை... வீணாகிறது குடிநீர்
/
தேங்குகிறது குப்பை... வீணாகிறது குடிநீர்
ADDED : நவ 25, 2024 06:26 AM

அபாய மின் கம்பம்
திருப்பூர், சத்யா காலனி மண்ணரை முதல் வீதியில் ஆர்.கே.ஜி., ரோட்டில் உள்ள மின்கம்பம் சாய்ந்து, அபாய நிலையில் உள்ளது.
- அண்ணாதுரை, சத்யா காலனி.
சாலையில் கழிவுநீர்
தாராபுரம், கவுண்டச்சிப்புதுார், கண்ணகி நகரில் கால்வாய் வசதியில்லாத காரணமாக, ரோட்டில் கழிவு நீர் சென்று வருகிறது.
- ராசாமணி, தாராபுரம்.
குழாய் உடைந்தது
திருப்பூர், தாராபுரம் ரோடு, தில்லை நகர் பத்மா கிட்னி சென்டர் அருகில் கடந்த, 20 நாட்களாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.
- ராஜேந்திரன், தில்லை நகர்.
பல்லாங்குழி சாலை
குன்னத்துாரில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பெரிய குழியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கண்ணன், குன்னத்துார்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் எம்.ஜி., புதுார் 3வது வீதியில் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டு மூடப்பட்டது. இதுவரை ரோடு போடாமல், படுமோசமாக உள்ளது.
- அருணா, எம்.ஜி., புதுார்.
திருப்பூர், 17 வது வார்டு திருவள்ளுவர் நகர் 5வது வீதியில் பாதாள சாக்கடை இணைப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- ரஞ்சித், திருவள்ளுவர் நகர்.
குப்பை தேக்கம்
திருப்பூர் அவிநாசி ரோடு பத்மாவதிபுரத்தில் கடந்த, ஒரு மாதமாக குப்பை அகற்றப்படாமல் மலை போல் தேங்கி உள்ளது. கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
- அசோக்குமார், பத்மாவதிபுரம்.
ரியாக் ஷன்
கற்கள் மாயம்
திருப்பூர் அங்கேரிபாளையம் சாஸ்திரி நகர் இரண்டாவது வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கற்கள் அகற்றப்பட்டன.
- திருநாவுக்கரசு, சாஸ்திரி நகர்.
குப்பைகள் அகற்றம்
திருப்பூர், கிருஷ்ணா நகர், முத்து நகரில் சுகாதார கேடாக காட்சியளித்து வந்த குப்பை முழுவதுமாக அகற்றப்பட்டது.
- ராமலிங்கம், கிருஷ்ணா நகர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் உள்ள, இரு வீதிகளில் தேங்கி கிடந்த குப்பை அகற்றப்பட்டது.
- சதீஷ், கரட்டாங்காடு.