/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் இருந்து குப்பை மேலாண்மை! கிராமங்களில் மக்கள் ஆர்வம்
/
வீடுகளில் இருந்து குப்பை மேலாண்மை! கிராமங்களில் மக்கள் ஆர்வம்
வீடுகளில் இருந்து குப்பை மேலாண்மை! கிராமங்களில் மக்கள் ஆர்வம்
வீடுகளில் இருந்து குப்பை மேலாண்மை! கிராமங்களில் மக்கள் ஆர்வம்
ADDED : நவ 11, 2025 11:21 PM
திருப்பூர்: 'நம் குப்பை; நம் பொறுப்பு' என்ற அடிப்படையில், இடுவாய் சுற்றுவட்டார கிராம மக்கள், குப்பையை தரம் பிரிப்பது தொடர்பான முயற்சியில் ஈடுபட தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு கழிவு மேலாண்மை அமைப்பின் நிர்வாகிகள், அதுதொடர்பான ஆலோசனை வழங்கினர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை, ஆங்காங்கே உள்ள பாறைக்குழியில் கொட்டுவதற்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐகோர்ட் வழிகாட்டுதல் படி, தற்போது, இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது; அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இருப்பினும், அப்பகுதியில் உள்ள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடுவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள, 61 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மக்கள், வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து அகற்றும் முறையை பின்பற்ற, தயாராகி வருகின்றனர்.
அவர்களது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு கழிவு மேலாண்மை சங்கத்தின் சார்பில் அதன் மாநில செயலர் வீரபத்மன், நிர்வாகக்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர், கிராம மக்களின் பிரதிநிதிகளாக பங்கேற்ற மக்களிடம் கலந்தாலோசனை நடத்தினர்.
கழிவு மேலாண்மை சங்க செயலர் வீரபத்மன் கூறியதாவது:
குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, வீடுகளில் இருந்தே குப்பையைதரம் பிரித்து அப்புறப்படுத்துவது தான் ஒரே வழி.
இதற்கு இடுவாய் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்; இது, வரவேற்கத்தக்கது. வீடுகளில் இருந்து வெளியேறும் உணவுக்கழிவு மற்றும் டாயப்பர், நாப்கின் தவிர, உலர் பாலிதீன் பை, பிளாஸ்டிக் பாட்டில், கவர், அட்டை பெட்டி உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடுக்கென, எங்கள் சங்கத்தின் சார்பில் சேகரித்து கொள்வதாக தெரிவித்துள்ளோம்.
மேலும், பாலிதீன் பை புழக்கத்தை தவிர்க்க, துணிப்பை மற்றும் குப்பையை தரம் பிரித்து அகற்ற, தொட்டிகளையும் தயார் செய்து வைத்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

