/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
/
ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ஆதரவற்ற குழந்தை வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : நவ 11, 2025 11:20 PM
திருப்பூர்: ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்பும் பெற்றோர், விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில், பெற்றோர், பாதுகாவலர் இல்லாத, ஆறு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை, குடும்பச் சூழலில் வளர்ப்பதற்கு, வளர்ப்பு பெற்றோர் தேவைப்படுகின்றனர். வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பெற்று வளர்க்க விரும்புவோர், வயது அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர் இருவரும் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில், ஆறு முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பதற்கு, பெற்றோர் இருவரின் குறைந்தபட்ச கூட்டுவயது 70, அதிகபட்ச கூட்டுவயது 110க்குள் இருக்க வேண்டும். 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை வளர்க்க, குறைந்தபட்ச கூட்டுவயது 70, அதிகபட்ச கூட்டு வயது 115க்குள் இருக்கவேண்டும்.
ஒற்றை பெற்றோர் வளர்ப்பு பராமரிப்பு திட் டத்தில், 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளை வளர்க்க, வளர்ப்பு தாய் மற்றும் தந்தை ஒருவரின் குறைந்தபட்ச வயது 35, அதிகபட்ச வயது 55; 12 வயதுக்கு மேல் 18 வயது வரையிலான குழந்தைகளை வளர்ப்பதற்கு, குறைந்தபட்ச வயது 35; அதிகபட்ச வயது 60க்குள் இருக்கவேண்டும்.
விருப்பமுள்ள பெற்றோர், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஏழாவது தளம், அறை எண்: 705ல் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம். 0421 2971198 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

