/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்மார்ட் சிட்டி' ரோட்டில் குப்பை; நொய்யல் மாசுபடும் அபாயம்
/
'ஸ்மார்ட் சிட்டி' ரோட்டில் குப்பை; நொய்யல் மாசுபடும் அபாயம்
'ஸ்மார்ட் சிட்டி' ரோட்டில் குப்பை; நொய்யல் மாசுபடும் அபாயம்
'ஸ்மார்ட் சிட்டி' ரோட்டில் குப்பை; நொய்யல் மாசுபடும் அபாயம்
ADDED : ஏப் 15, 2025 11:45 PM

திருப்பூர்; தொழிற்சாலைகளின் கழிவுகளை கொட்டும் இடமாக, நொய்யல் ரோடு மாறிவிட்டதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் நொய்யல் கரையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாதை உருவாக்கி, தார்ரோடு அமைத்து, ஆற்றில் கழிவுகளை கொட்ட முடியாதபடி, இரும்பு வலை தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. தார்ரோடு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன; விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், எஸ்.ஆர்., நகர் பின்புறம் உள்ள நொய்யல் ரோட்டில், அதிக அளவு தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பனியன் எம்பிராய்டரிங் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவு மூட்டைகள், ஆற்றின் ஓரமாக, வரிசையாக கொட்டப்படுகிறது. சில வாரங்களுக்கு பிறகு, தீ வைத்து எரிக்கின்றனர். இதேபோல், பல்வேறு தொழிற்சாலை கழிவுகளும், ஆற்றோரமாக கொட்டப்படுகிறது.
மாநகராட்சி பணியாளர்கள், நொய்யல் ரோடு, குப்பை களமாக மாற்றுவதை அனுமதிக்க கூடாது. குப்பை கொட்டும் நபர்களை கையும், களவுமாக பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தால், நொய்யல் ஆற்றோட ரோடு, குப்பைமேடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் ரோட்டோரம் அமைக்கும் ஸ்மார்ட் சிட்டி ரோட்டை, துாய்மையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்.

