/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை குவியல்; மக்கள் புகார்; மேயரிடம் பேசிய எம்.எல்.ஏ.,
/
குப்பை குவியல்; மக்கள் புகார்; மேயரிடம் பேசிய எம்.எல்.ஏ.,
குப்பை குவியல்; மக்கள் புகார்; மேயரிடம் பேசிய எம்.எல்.ஏ.,
குப்பை குவியல்; மக்கள் புகார்; மேயரிடம் பேசிய எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 13, 2025 10:30 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22 வது வார்டுக்கு உட்பட்ட குமரானந்தபுரம் எல்.ஜி., மைதானத்தில் பல பகுதியில் இருந்து எடுத்து வரப்படும் குப்பை கொட்டப்படுகிறது. மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பையால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுதொடர்பாக போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமாரிடம் தகவல் தெரிவித்தனர். குவிந்து கிடக்கும் மைதானத்துக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் வந்தனர். மக்களிடம் இப்பிரச்னை குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்த மேயர், மாநகராட்சி கமிஷனரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம், கிருமிநாசினி பவுடர் குப்பை கொட்டியுள்ள பகுதியில் தெளிக்கப்பட்டது.