/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதிகள் தோறும் தேங்கும் குப்பை; மாநகராட்சி நிர்வாகம் 'திணறல்' : துர்நாற்றத்தால் மக்கள் 'அலறல்'
/
வீதிகள் தோறும் தேங்கும் குப்பை; மாநகராட்சி நிர்வாகம் 'திணறல்' : துர்நாற்றத்தால் மக்கள் 'அலறல்'
வீதிகள் தோறும் தேங்கும் குப்பை; மாநகராட்சி நிர்வாகம் 'திணறல்' : துர்நாற்றத்தால் மக்கள் 'அலறல்'
வீதிகள் தோறும் தேங்கும் குப்பை; மாநகராட்சி நிர்வாகம் 'திணறல்' : துர்நாற்றத்தால் மக்கள் 'அலறல்'
UPDATED : நவ 04, 2025 01:33 AM
ADDED : நவ 03, 2025 11:55 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரமாகும் குப்பைகழிவுகள், பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டு வந்தது. கடந்த மாதம், முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில், இது குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட், பாறைக்குழியில் குப்பை கொட்ட தடை விதித்தது. மேலும், பல்வேறு அறிவுறுத்தல்களை குப்பைகளை கையாளும் பணியில் பின்பற்றவும் உத்தரவிட்டது. இதனால், பாறைக்குழியில் குப்பையைக் கொட்டும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது.
அத்துடன், இடுவாய் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து கையாளும் நடவடிக்கைக்கு ஆயத்தப் பணிகள் துவங்கப்பட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த இடுவாய் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம், மறியல் என நாள் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை குறித்து முதலிபாளையம் மற்றும் இடுவாய் பகுதியினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும், சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனால், அதற்கு முன்னதாக இடுவாய் பகுதியில் உள்ள நிலத்தில் உரிய ஏற்பாடுகளை செய்து முடிக்கும் முனைப்பில் மாநகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அதே சமயம் நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை பெற்று வரும் துாய்மைப் பணியாளர்கள் அவற்றை, வார்டு தோறும் காலியாக உள்ள இடங்கள், ரோட்டோரங்கள், ெசகன்டரி பாய்ன்ட் ஆக குப்பைகள் வழக்கமாக கொட்டப்படும் இடங்களிலும் அவற்றை கொட்டி குவித்து வருகின்றனர்.
ஐகோர்ட் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கவுள்ள வழக்கு விசாரணைகளுக்குப் பின்பே இப்பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். அதுவரை குப்பை பிரச்னை தொடர்ந்து நீடிக்கும்.

