/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
/
காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
ADDED : அக் 15, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: திருப்பூர் மாவட்டத்திலுள்ள காஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் வரும், 24ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு அறை எண் 120ல் நடக்கிறது.
இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஸ் நுகர்வோர்கள் குறைகள், புகார் இருப்பின், தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்குமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.