sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 காஸ் சிலிண்டர் பதுக்கல்: தனியார் ஏஜென்சிக்கு 'சீல்'

/

 காஸ் சிலிண்டர் பதுக்கல்: தனியார் ஏஜென்சிக்கு 'சீல்'

 காஸ் சிலிண்டர் பதுக்கல்: தனியார் ஏஜென்சிக்கு 'சீல்'

 காஸ் சிலிண்டர் பதுக்கல்: தனியார் ஏஜென்சிக்கு 'சீல்'


ADDED : மார் 14, 2026 03:03 AM

Google News

ADDED : மார் 14, 2026 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காஸ் சிலிண்டர் பதுக்கல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த புகாரின்படி, திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருப்பூர், பல்லடம் ரோடு, வாய்க்கால் மேடு, பஸ் ஸ்டாப் பகுதியில், ஸ்ரீசற்குரு காஸ் ஏஜென்ஸி என்ற தனியார் காஸ் நிறுவனம் செயல்படுகிறது.

நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக இணைப்பு காஸ் சிலிண்டர்கள், விதிகளுக்கு புறம்பாக இருப்பு வைத்துள்ளதும், தற்போதைய சூழ்நிலையில் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், நல்லுார் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் புகார் அளித்தார். அதன்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆய்வு நடத்திய போது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

அதன் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முடியாததால், அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''காஸ் சிலிண்டர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏதேனு ம் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதால் சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us