/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காஸ் சிலிண்டர் விற்பனை நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
/
காஸ் சிலிண்டர் விற்பனை நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
காஸ் சிலிண்டர் விற்பனை நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
காஸ் சிலிண்டர் விற்பனை நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 11:25 PM
திருப்பூர்; திருப்பூரில் தனியார் காஸ் ஏஜன்சிகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என, நல்லுார் நுகர்வோர் மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
திருப்பூர், கல்லம்பாளையம் பகுதியில் தகர ஷீட் வேய்ந்த வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை. இங்கு தனியார் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரைப் பொறுத்தவரை மக்கள் தொகை பெருகி, அதிகளவிலான குடும்பங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அவர்களிடம் தனியார் காஸ் நிறுவனங்கள் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி சிலிண்டர்களை ரோட்டோரம் கடைகளில் வைத்து விற்பனை செய்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில்லாத வகையில் தான் அவற்றை டெலிவரிக்கு கொண்டு செல்கின்றனர்.எந்த விதமான ஆவணங்கள் இன்றி வாடிக்கையாளர்களுக்கு இதை சப்ளை செய்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டால் தேவையற்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னை குறித்து தொடர்ந்து அரசு துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. தனியார் காஸ் நிறுவனங்கள் மீது உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.