/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை
/
அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை
ADDED : மார் 20, 2024 12:11 AM

அவிநாசி;அவிநாசி அருகே தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 'கேட்' அமைத்து கொடுக்கப்பட்டது.
தெக்கலுாரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்திநகர் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர்களுக்கு கதவுகள் இல்லாமல் போதிய பாதுகாப்பின்றி இருந்தது. இதையறிந்த, தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில் இரு பள்ளிகளுக்கும் மெயின் கேட் அமைத்து கொடுக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் ஜார்ஜ் சுந்தர்ராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தேவராஜன், வட்டார கல்வி அலுவலர்திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
தெக்கலுார் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தாமணி, காந்தி நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, முன்னாள் தலைவர் நடராஜன், முன்னாள் மாணவர் பேரவை தலைவர் சாந்தாமணி, ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா, ஜெயந்தி, பொருளாளர் பிரபு பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலாளர் சிவகுமார் நன்றியுரை கூறினார்.

