ADDED : பிப் 16, 2025 11:51 PM

பொங்கலுார்; அலகுமலை ஜல்லிக்கட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையருக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான முதல் பரிசு யூனிகான் பைக் சிவகங்கையைச் சேர்ந்த விக்னேஷுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த நாமக்கல் கார்த்திக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த மதுரையைச் சேர்ந்த மற்றொரு கார்த்திக்கு ஏழு எச்.பி., மினி வீடர் வழங்கப்பட்டது.
சிறந்த காளைகளுக்கான முதல் பரிசாக மதுரையைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் காளைக்கு யூனிகான் பைக் வழங்கப்பட்டது.
தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரின் மாடு இரண்டாம் இடம் பிடித்தது. அவருக்கு ஒன்பது எச்.பி., பவர் வீடர் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் சிவகங்கையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மாடு பெற்றது. அவருக்கு, 7 எச்.பி., பவர் வீடர் வழங்கப்பட்டது. மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், எம்.எல்.ஏ., ஆனந்தன், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்க தலைவர் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணி, இளைஞரணி தலைவர் கவுரிசங்கர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

