/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு வலை
/
சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு வலை
ADDED : அக் 06, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சமீபத்தில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி, இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதில், கடந்த ஆண்டு சிறுமிக்கு, சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் பழக்கமானார்.
திருப்பூரில் உள்ள சிறுமியை சந்திக்க வந்த மணிகண்டன், ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, சிறுமி கர்ப்பமானது தெரிந்தது. அவர் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.