/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வைட்டமின் 'ஏ' திரவம் குட்டீஸூக்கு கொடுங்க !
/
வைட்டமின் 'ஏ' திரவம் குட்டீஸூக்கு கொடுங்க !
ADDED : மார் 17, 2025 01:50 AM
திருப்பூர்; 'வைட்டமின் ஏ' சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை; விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல்; மாலைக்கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய பாதிப்பு, ஆரம்ப நிலையிலேயே தடுக்க, ஆண்டுக்கு இருமுறை 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான முதல் கட்ட வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் பணி இன்று மாநிலம் முழுதும் துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஆறு மாதம் துவங்கி ஐந்து வயது வரை உள்ள, 1.06 லட்சம் வழங்க, 8,578 வைட்டமின் 'ஏ' திரவ குப்பிகள் தருவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து, துணை ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆறு மாதம் முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, ஒரு மி.லி., அளவு, ஓராண்டு முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இரண்டு மி.லி., அளவு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படும். இன்று துவங்கி வரும், 22ம் தேதி வரை வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது.