திருப்பூர், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் அறிக்கை:
'லாபகரமான செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு' என்ற தலைப்பில் வானொலி பண்ணை பள்ளி வகுப்பு நடக்கிறது. வரும், 6ம் தேதி துவங்கி, தொடர்ந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு, 7:30 முதல், 8:00 மணி வரை, வாரம் ஒரு வகுப்பு என, 11 வகுப்புகள் ஒளி பரப்பு செய்யப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பயிற்சியின் இறுதியில் திருப்பூர், கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒருநாள் நேரடியாக பல்கலை பேராசிரியர்களை கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அன்று பயிற்சி கையேடு மற்றும் பேனா வழங்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கட்டணத்தை மைய அலுவலகத்தில் நேரடியாகவோ, tirupurvutrc@tanwas.org.in என்ற இணையதளம் வாயிலாகவோ செலுத்தலாம். மேலும், விபரங்களுக்கு, 94435 - 61869, 87542 - 12712 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

