/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்க நகைக்கடன் விதிமுறை விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
/
தங்க நகைக்கடன் விதிமுறை விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
ADDED : மே 30, 2025 12:52 AM
திருப்பூர், ;'தங்க நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிமுறையை திரும்ப பெற வேண்டும்' என, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகர செயலாளர் ரமேஷ், கூறியதாவது: விவசாயிகளுக்கு, 4 சதவீத வட்டியில் வழங்கப்பட்டு வந்த தங்க நகை திட்டம், ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆண்டுதோறும் முழுப்பணத்தையும் செலுத்தி, தங்க நகை கடனை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. நகைக்கடன் பெறும் தொகையில் ஒரு பகுதியை 'டெபாசிட்' செய்ய வேண்டும் அல்லது வங்கியில் 'இன்சூரன்ஸ்' எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவர்.
பாரம்பரிய உரிமையாக வைத்துள்ள தங்க நகைகளுக்கு ரசீது மற்றும் உரிமை ஆதாரம் எப்படி பெற முடியும். வங்கிகளில், 80 பைசா வட்டியில் தங்க நகைக்கடன் பெற்று கொண்டிருந்த விவசாயிகளை, 1.80 ரூபாய் வட்டிக்கு தனியார் நிறுவனங்களிடம் தங்க நகைக்கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு, 100 சதவீதம் வசூலாகும் தங்க நகைக்கடன் பெற கடுமையான கட்டுப்பாடு ஏற்புடையது அல்ல; இது, விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் செயல். இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.