/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாலிக்கு தங்கம் திட்டம் 5 ஆண்டில் 26 கிலோ வழங்கல்
/
தாலிக்கு தங்கம் திட்டம் 5 ஆண்டில் 26 கிலோ வழங்கல்
தாலிக்கு தங்கம் திட்டம் 5 ஆண்டில் 26 கிலோ வழங்கல்
தாலிக்கு தங்கம் திட்டம் 5 ஆண்டில் 26 கிலோ வழங்கல்
ADDED : டிச 22, 2025 05:16 AM
திருப்பூர் மாவட்டத்தில், 2025- 26ம்ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவி மற்றும்தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
தலா 8 கிராம் வீதம், 74 பயனாளிகளுக்கு, மொத்தம் 74 பவுன் தங்கம்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய்; பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என, பயனாளிகள் 74 பேருக்கு, மொத்தம் 32.25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளி பெண்களுக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கினர். கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி வரவேற்றார்.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021 முதல் 2025வரை, ஐந்து ஆண்டுகளில், 3,317 பயனாளிகளுக்கு, தலா ஒரு பவுன் வீதம், மொத்தம் 26.536 கிலோ தங்கமும், மொத்தம் 14 கோடியே எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப் பட்டுள்ளது,' என்றார்.
- நமது நிருபர் -:

