/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொட்டி அமைத்தும் பயனில்லை குடிநீர் வினியோகிக்காததால் அவதி
/
தொட்டி அமைத்தும் பயனில்லை குடிநீர் வினியோகிக்காததால் அவதி
தொட்டி அமைத்தும் பயனில்லை குடிநீர் வினியோகிக்காததால் அவதி
தொட்டி அமைத்தும் பயனில்லை குடிநீர் வினியோகிக்காததால் அவதி
ADDED : டிச 22, 2025 05:17 AM

உடுமலை: உடுமலை, மானுப்பட்டி ஊராட்சியில், திட்ட பணி மேற்கொண்டு இரு ஆண்டாகியும், குடிநீர் வினியோகம் செய்யாததால், கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது மானுப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிகுட்பட்ட
வெள்ளமடை பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகளில், 800க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பெரும்பாலும், தோட்டத்துசாளைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ள நிலையில், குடிநீர் வசதியின்றி, பல ஆண்டுகளாக மக்கள் பாதித்து வருகின்றனர்.
இந்த பிரச்னை குறித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சிக்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் பல முறை புகார் தெரிவித்து வந்தனர். இப்பகுதி மக்களின் பல கட்ட போராட்டத்திற்கு பின், இரு ஆண்டுக்கு முன், போர்வெல் அமைத்து, மோட்டார் மற்றும், 2 கி.மீ., துாரத்திற்கு குழாய் அமைத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்தும் வகையில், மூன்று தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், திட்ட பணிகளை முழுமையாக முடிக்காமல், தொட்டிகளுக்கு குழாய் இணைப்பு வழங்காமல், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பணிக்கு, 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால், தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சியும், அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானுப்பட்டி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

