/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலம்பத்தில் தங்கம்; மாணவிக்கு பாராட்டு
/
சிலம்பத்தில் தங்கம்; மாணவிக்கு பாராட்டு
ADDED : பிப் 06, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; சர்வதேச சிலம்பம் போட்டியில், தங்கம் வென்ற மாணவிக்கு, உடுமலை ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பில், கோவாவில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ஓபன் பிரிவில், 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இதில், உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி காவ்யா தனித்திறன் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.
மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

