/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சல் போட்டியில் தங்கம்; மாணவனுக்கு பாராட்டு
/
நீச்சல் போட்டியில் தங்கம்; மாணவனுக்கு பாராட்டு
ADDED : அக் 25, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : கோவாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.
தமிழகம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த 12 வயது மாணவன் சபரி ஆனந்த் பங்கேற்று மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பூலுவபட்டி அருகில் உள்ள ெஹச்2ஓ நீச்சல் கிளப்பில் இவர் பயிற்சி பெற்று வருகிறார்.
இவரை ெஹச்2ஓ நீச்சல் கிளப் இயக்குனர் சரவணன், தலைமைப்பயிற்சியாளர்கள் சுதீஷ், ஹரிஷ், சிபு, பயிற்சியாளர் அஜீஷ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை அளித்து பாராட்டினர்.