/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுப்புடவையுடன் தங்கம்; திண்ணை பிரசாரத்தில் வாக்குறுதி
/
பட்டுப்புடவையுடன் தங்கம்; திண்ணை பிரசாரத்தில் வாக்குறுதி
பட்டுப்புடவையுடன் தங்கம்; திண்ணை பிரசாரத்தில் வாக்குறுதி
பட்டுப்புடவையுடன் தங்கம்; திண்ணை பிரசாரத்தில் வாக்குறுதி
ADDED : ஜூலை 27, 2025 12:28 AM
திருப்பூர், : அ.தி.மு.க., ஆட்சியில், பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுமென, நிர்வாகிகள் திண்ணை பிரசாரம் செய்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், வாரம் தோறும் திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. அவ்வகையில், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதி, புதுார் பிரிவில், திண்ணை பிரசாரம் நடந்தது. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் சிவளா தினேஷ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சி திட்டங்கள் - தி.மு.க., ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து, தங்களை ஆதரிக்க வேண்டும். பட்டுப்புடவையுடன், தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார்.
முன்னதாக, பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., விஜயகுமார், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, பகுதி செயலாளர் நாச்சிமுத்து, ஹரிஹரசுதன், முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.