/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நல்லாறு துாய்மை காலத்தின் கட்டாயம்'
/
'நல்லாறு துாய்மை காலத்தின் கட்டாயம்'
ADDED : நவ 09, 2025 11:34 PM

அவிநாசி: நல்லாற்றை துார்வாரி துாய்மைப்படுத்தவும், பாதுகாக்கவும், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றுக்கு மனு அளிக்க நல்லாறு பாதுகாப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.
நல்லாற்றை துார்வாரி துாய்மைப்படுத்திட நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், திருமுருகன்பூண்டி வேலன்ஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் செல்லும் நல்லாற்றை துார்வாரி துாய்மைப்படுத்திடவும், பாதுகாக்கவும் உரிய முறையில் ஆய்வு செய்து நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றுக்கு மனு அளிப்பது; நல்லாற்று நீர்வழித்தடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

