/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சை மிளகாய்க்கு நல்ல விலை; நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்
/
பச்சை மிளகாய்க்கு நல்ல விலை; நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்
பச்சை மிளகாய்க்கு நல்ல விலை; நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்
பச்சை மிளகாய்க்கு நல்ல விலை; நடவுக்கு விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 31, 2025 11:21 PM
உடுமலை; உடுமலை பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுார், குட்டியகவுண்டனுார், மருள்பட்டி சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, விளைநிலங்களில், மேட்டுப்பாத்தி, சொட்டு நீர் பாசனம் அமைத்து, இவ்வகை சாகுபடியில், ஈடுபடுகின்றனர்.
கடந்த மாதம், மழை உள்ளிட்ட காரணங்களால், உற்பத்தி பாதித்து, பச்சை மிளகாய்க்கு உடுமலை உழவர் சந்தையில், தற்போது, கிலோ, 50 ரூபாய்க்கும் அதிகமாக விலை கிடைக்கிறது.
தினசரி சந்தை உள்ளிட்ட பிற சந்தைகளில் கொள்முதல் செய்யப்படும், பச்சை மிளகாய், கேரளா மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'பிற காய்கறி சாகுபடியை விட, பச்சை மிளகாய் சாகுபடிக்கு செலவு குறைவாகவே பிடிக்கிறது. பல்வேறு காரணங்களால், தற்போது நல்ல விலை கிடைக்கிறது. வரும் சீசனில், சாகுபடிக்காக, நாற்று நடவு செய்ய துவங்கியுள்ளோம். நடவு சீசனில், தோட்டக்கலைத்துறை பண்ணை வாயிலாக நாற்று உற்பத்தி செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.