UPDATED : அக் 15, 2026 09:24 PM
ADDED : அக் 15, 2026 09:20 PM

திருப்பூர்: மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், வெள்ள அபாயத்தைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூர் மாநகராட்சி எல்லையில் நல்லுாறு துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
கோவை மாவட்டம், அன்னுார் சுற்றுப்பகுதிகளில் சிறு ஓடைகள் இணைந்து உருவாகும் நல்லாறு, அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் வழியாகப் பாய்ந்து நஞ்சராயன் குளத்தில் கலக்கிறது. காலப்போக்கில் ஆற்றின் பாதை பல இடங்களில் குறுகியுள்ளதுடன், செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. சில இடங்களில் கரையோர ஆக்கிரமிப்புகளும் உள்ளன.
வடகிழக்கு பருவமழையின்போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால், புதர்களால் நீரோட்டம் தடைப்பட்டு, தண்ணீர் கரையைத் தாண்டி வெளியேறும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க, ஆற்றைத் துார்வாரி சுத்தப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது.
அதன்படி, மாநகராட்சி எல்லையில் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ள பகுதி முதல் துார்வாரும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து நஞ்சராயன் குளம் வரை ஆற்றின் பாதையைச் சுத்தப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நல்லாறு துார்வாரும் பணி நடக்கிறது.
