/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்ஸ்ெஷட் விரிவாக்க பணி தொடர் மழையால் நிறுத்தம்
/
கூட்ஸ்ெஷட் விரிவாக்க பணி தொடர் மழையால் நிறுத்தம்
கூட்ஸ்ெஷட் விரிவாக்க பணி தொடர் மழையால் நிறுத்தம்
கூட்ஸ்ெஷட் விரிவாக்க பணி தொடர் மழையால் நிறுத்தம்
ADDED : நவ 25, 2025 06:47 AM

திருப்பூர்: தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்குவதால், கூட்ஸ்ெஷட் விரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
மத்திய அரசின் 'கதிசக்தி' திட்டத்தின் கீழ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் விரிவாக்கும் பணி அக்., முதல் வாரம் துவங்கியது. நுாறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பழைய கூட்ஸ்ெஷட் இடித்து அகற்றப்பட்டது.
முதல் கட்டமாக தரைத்தளம், பார்க்கிங், சரக்கு ரயில்கள் வந்து செல்வதற்கான வழித்தடம் விரிவுபடுத்தும் பணிகள் துவங்கியது. பத்துக்கு மேற்பட்ட லாரிகள், பொக்லைன், ஜே.சி.பி. கிரேன்களை பயன்படுத்தி, அதிக எடையுள்ள கற்கள், மண் அகற்றப்பட்டு, தற்காலிக பாதை உருவாக்கப்பட்டது. அதில், கான்கிரீட் போடுவதற்கான ஜல்லிக்கற்கள், சிமென்ட் கொண்டு வந்து இறக்கப்பட்டது.
திருப்பூரில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது திருப்பூரில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இரு தினங்களாக பகல் மற்றும் இரவில் பெய்த மழையால் பணி நடக்குமிடத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பணி மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது; பணி நிறுத்தப்பட்டுள்ளது.

