ADDED : நவ 25, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: குளிர்ந்த சீதோஷ்ண நிலை, துாறல் மழை காரணமாக செடிகளில் பூக்கள் அதிகளவில் உதிர்கிறது.
தோட்டங்களுக்கு சென்று பூக்களை பறிக்க முடியாததால், மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக, இரண்டு டன் பூக்கள் திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு வரும் நிலையில், நேற்று, 900 கிலோ மல்லிகை பூ மட்டும் வந்தது.
கார்த்திகை மாத சீசன் துவங்கியதில் இருந்து பூ விற்பனை சற்று சுறுசுறுப்பாகியுள்ளது. வரத்து குறைந்து, விலை அதிகமாகியுள்ளது, பூ வியாபாரிகளை கவலை அடைய செய்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 600, முல்லை கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதே நேரம், மழைத்துளியால் உதிர்ந்து விடும் வாய்ப்புள்ள செவ்வந்தி பூ வந்து குவிவதால் கிலோ, 200 ரூபாய்க்கு செவ்வந்தி பூ விற்கப்படுகிறது.

