/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் கல்வி நிறுவனத்தில் 'மெகா சயின்ஸ் எக்ஸ்போ'
/
காங்கயம் கல்வி நிறுவனத்தில் 'மெகா சயின்ஸ் எக்ஸ்போ'
காங்கயம் கல்வி நிறுவனத்தில் 'மெகா சயின்ஸ் எக்ஸ்போ'
காங்கயம் கல்வி நிறுவனத்தில் 'மெகா சயின்ஸ் எக்ஸ்போ'
ADDED : நவ 25, 2025 06:47 AM

திருப்பூர்: காங்கயம் கல்வி நிறுவனத்தில் மெகா சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது.
பள்ளி கல்வித்துறை, காங்கயம் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து பிராந்திய அறிவியல் போட்டி மற்றும் மெகா சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது.
காங்கயம் வணிகவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் சுரேஷ் வரவேற்றார். காங்கயம் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேந்திர கவுடா தலைமை வகித்து பேசினார். காங்கயம் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் டாக்டர் ராம்குமார் மற்றும் காங்கயம் மருந்து அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மொத்தம், 190 அறிவியல் திட்டங்களை காட்சிப்படுத்தினர். நிபுணர் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில், 90 சிறந்த திட்டங்கள், தேர்வு செய்யப்பட்டன. அதில், 28 திட்டங்கள் மாநில அளவில்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. சிறந்த செயல்திறன் காட்டிய மாணவர்களுக்கு டாக்டர் ராம்குமார், சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினார்.

