/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ் நடத்துனர் கண்ணீர் மனு இலகு ரக பணி வழங்க வேண்டுகோள்
/
அரசு பஸ் நடத்துனர் கண்ணீர் மனு இலகு ரக பணி வழங்க வேண்டுகோள்
அரசு பஸ் நடத்துனர் கண்ணீர் மனு இலகு ரக பணி வழங்க வேண்டுகோள்
அரசு பஸ் நடத்துனர் கண்ணீர் மனு இலகு ரக பணி வழங்க வேண்டுகோள்
ADDED : ஜன 28, 2025 05:42 AM

திருப்பூர்: உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், இலகு ரக பணி ஒதுக்க கோரி, குடும்பத்தினருடன் வந்து, கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார்.
தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்த சாமிநாதன், 51. அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்த இவர், மனைவி ரங்கநாயகி மற்றும் மகள்களுடன் வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின், கூறியதாவது:
கடந்த, 2007ல் அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து நடத்துனராக பணிபுரிந்தேன். கடந்த 2022ல், திருப்பூர் கிளை - 2ல், புதிய பஸ் ஸ்டாண்ட் - கோவில்வழி வழித்தடத்தில் பணியில் இருந்தபோது, கை கால்கள் செயலிழந்து பாதிக்கப்பட்டேன். சென்னை மருத்துவ குழுவினர் பரிசோதித்து, 60 சதவீதம் உடல் பாதிப்பு இருப்பதாக அறிக்கை வழங்கினர் அந்த அறிக்கை அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம், 2023ல், தாராபுரம் கிளையில் பாதுகாவலராக பணி வழங்கியது.
கடந்தாண்டு நவ., 30ம் தேதி வரை பணிபுரிந்தேன். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு பணி வழங்கவில்லை. மருத்துவ பரிசோதனைகள் இல்லாமலேயே, தாராபுரம் கிளையில், 18 பேர் இலகு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், எனக்கு மட்டும் பணி வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மருத்துவ செலவு, குடும்ப அன்றாட தேவைகள், குழந்தைகளின் கல்விக்கு போதிய பொருளாதார வசதியின்றி மிகவும் சிரமப்படுகிறேன்.
அரசு போக்குவரத்து கழகத்தின் தாராபுரம் கிளையில் எனக்கு, மீண்டும் இலகு ரக பணி வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

