/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஜன 08, 2025 12:23 AM

திருப்பூர்; சாமளாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 34. கோவையில் நில அளவையாளராகப் பணியாற்றுகிறார். கடந்த, 2018ல், அரசு பஸ்சில் பயணித்தார். அவர் சென்ற பாஸ் பல்லகவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானதில், காயமடைந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இதில் அவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால், அவர் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, மனு அளித்தார். விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.