/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் அதிரடி ஜப்தி
/
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் அதிரடி ஜப்தி
ADDED : ஜூலை 22, 2025 10:07 PM
-- நமது நிருபர் -
விபத்தில் காயமடைந்த பனியன் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத காரணமாக, அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், கொடுவாயைச்சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 34; பனியன் தொழிலாளி. கடந்த, 2017 செப்., 7ல் டூவீலரில் தாராபுரம் ரோட்டில், செங்காட்டுபாளையம் பிரிவு அருகே சென்ற போது, திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.
இதில், அவர் காயமடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர். இதனை தொடர்ந்து, விபத்து இழப்பீடு கேட்டு சண்முகசுந்தரம், திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அவருக்கு, 4 லட்சத்து, 44 ஆயிரத்து, 828 ரூபாய் வழங்க கோர்ட் தீர்ப்பளித்தது.
ஆனால், அரசு போக்குவரத்து துறை விபத்து இழப்பீடு தொகை வழங்காததால், சண்முகசுந்தரம் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து, பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலு உத்தரவிட்டார்.
அதனயடுத்து, நேற்றுமுன்தினம் கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த திருப்பூர் - நாகர்கோவில் செல்லும் பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட் வளாகத்துக்கு கொண்டு சென்றனர். இவ்வழக்கில், பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல்கள் முருகேசன், சத்யா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்.