/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு இயங்கிய அரசு பஸ்கள் மாயம்; மக்கள் பாதிப்பு
/
கிராமங்களுக்கு இயங்கிய அரசு பஸ்கள் மாயம்; மக்கள் பாதிப்பு
கிராமங்களுக்கு இயங்கிய அரசு பஸ்கள் மாயம்; மக்கள் பாதிப்பு
கிராமங்களுக்கு இயங்கிய அரசு பஸ்கள் மாயம்; மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 21, 2025 08:31 PM
உடுமலை; உடுமலையிலிருந்து, கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள், மாணவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலையிலிருந்து, அர்த்நாரிபாளையத்திற்கு அரசு டவுன் பஸ் எண் - 34 இயக்கப்பட்டு வந்தது.
வழியோரத்திலுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே போக்குவரத்து வசதியாக, இந்த டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முன் அறிவிப்பு இல்லாமல், கடந்த ஒரு வாரமாக டவுன் பஸ் இயக்கப்படவில்லை. தேவனுார் புதுார், கரட்டு மடம், எரிசனம்பட்டி மற்றும் உடுமலையிலுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும், மாணவர்கள் பஸ் இல்லாமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த, இந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.