/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி சேர்க்கை; 794 இடங்கள் நிரம்பின
/
அரசு கல்லுாரி சேர்க்கை; 794 இடங்கள் நிரம்பின
ADDED : ஜூலை 13, 2025 08:34 PM

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில், இதுவரை 794 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதாலாமாண்டில் 864 இடங்கள் உள்ளன. முதலாமாண்டுக்கான சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் மாதம் முதற்கட்டமாக நடந்தது.
ஜூன் இறுதியில் முதாலாமாண்டுக்கான வகுப்புகளும் துவக்கப்பட்டன. கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்கள், வர முடியாமல் இருப்பவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வுகள் அரசு அறிவிப்பின்படி தொடர்ந்து நடக்கிறது.
நேற்றுமுன்தினம் நடந்த சிறப்பு கலந்தாய்வில், 35 இடங்கள் நிரப்பபட்டுள்ளன. இதுவரை 794 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தவிர, ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், துறை மாறுதலும் நடந்தது. மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கையும் தொடர்ந்து நடக்கிறது.
தற்போது, கூடுதலாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்துவதிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் நேரடியாக சேர்க்கை பதிவு செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பு வரும் வரை, கல்லுாரியில் முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.