/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் பயிற்சிக்கு துப்பாக்கிகள் வழங்கல்

ADDED : ஜூலை 18, 2025 09:14 PM

உடுமலை; உடுமலை அரசு கல்லுாரியில், தேசிய மாணவர் படை ( என்.சி.சி., ) மாணவர்கள் பயிற்சிக்காக துப்பாக்கிகள் வழங்கும் விழா நடந்தது.
உடுமலை அரசு கல்லுாரியில், தேசிய மாணவர் படையில் இணைந்துள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக துப்பாக்கிகள் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான துப்பாக்கிகளை, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில், தலைவர் பாலமுருகன், செயலர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், ரவிஆனந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.
துப்பாக்கிகள் வைக்கும் ஸ்டாண்ட், உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில், தலைவர் கார்த்திகேய பிரபு, செயலர் மணிகண்டபிரபு, முன்னாள் தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர்.
தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினென்ட் விஜயகுமார், வணிகவியல் துறைத்தலைவர் மலர்வண்ணன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.