/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
/
மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
ADDED : ஜன 30, 2025 11:50 PM

திருப்பூர்: மாநில அளவிலான பயிலரங்கில் பங்கேற்க சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கோவை பாரதியார் பல்கலையில் இன்று முதல் பிப்., 2ம் தேதி வரை, 'சமூக நீதிக்கான இளைஞர்கள்' எனும் தலைப்பில் பயிலரங்கம் நடக்கிறது. மாநிலம் முழுதும், 255 மாணவ, மாணவிகள் இப்பயிலரங்கத்தில் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட (அலகு -- 2) மாணவர்கள், ராஜிவ் (விலங்கியல்), பிரவீன் (வணிகவியல்) ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில பயிலரங்குக்கு செல்லும் மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., (அலகு - 2) திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.