/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்; ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்; ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 16, 2024 01:03 AM

திருப்பூர்;பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டம்; சரண் விடுப்பு சலுகை; 7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படியான, 21 மாத நிலுவை தொகை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அவ்வகையில் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க தலைவர் சுஜாத் அலி தலைமை வகித்தார்.
அதன் பொருளாளர் முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் மூர்த்தி, துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குழந்தை அற்புதராஜ், கண்ணன் குமரன் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்றோர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ராஜ் நன்றி கூறினார்.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வரும் 26ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.