/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2024 11:35 PM

உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, அனைத்து அரசு ஊழியர்களையும் பயனளிப்பு ஓய்வூதிய முறைக்கு கொண்டு வரவேண்டும்.
5 ஆண்டுக்கு ஒரு முறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்யவும், அரசு ஊழியர்கள், ஒய்வூதியர்களுக்கு அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உத்திரவாதப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட கிளைத்தலைவர் எலிசபெத் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்சராஜ், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், வட்ட கிளைத்தலைவர் விவேகானந்தன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.