/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பெண்கள் பள்ளிக்கு பாதுகாப்பில்லை: 'குடி' மகன்கள் தொல்லை
/
அரசு பெண்கள் பள்ளிக்கு பாதுகாப்பில்லை: 'குடி' மகன்கள் தொல்லை
அரசு பெண்கள் பள்ளிக்கு பாதுகாப்பில்லை: 'குடி' மகன்கள் தொல்லை
அரசு பெண்கள் பள்ளிக்கு பாதுகாப்பில்லை: 'குடி' மகன்கள் தொல்லை
ADDED : ஏப் 06, 2025 10:19 PM
உடுமலை; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிப்பதால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
உடுமலை தளி ரோடு மேம்பாலத்தின் கீழ், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே உள்ள சுரங்கப்பாலத்தின் அருகில், அமர்ந்து கொண்டு பலரும் மாலை நேரங்களில் மது அருந்துகின்றனர்.
மது பாட்டில்களையும், அதன் கழிவுகளையும் பள்ளியின் அருகில் வீசிச்செல்கின்றனர்.தொடர்ந்து 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அப்பகுதியினர், பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோர், எந்நேரமும் பதட்டத்தில் தான் இருக்க வேண்டியுள்ளது.
சிறப்பு வகுப்புகள் முடிந்து, மாலை நேரங்களில் அவ்வழியாக மாணவியர் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
மேலும் கழிவுகளால், மிகுதியான துர்நாற்றம் வீசுவதோடு, பள்ளியின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், காலை நேரங்களிலும் இந்த அவலம் அரங்கேறுகிறது. மது அருந்தி விட்டு, பாட்டில்களை சுரங்கப்பாதையிலும் வீசிச்செல்கின்றனர்.
அவ்வழியாக நடந்து செல்வோர் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறியதாவது:
'குடி'மகன்கள் சுரங்கபாலத்தின் அருகில் நின்று கொண்டு, பல தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதால், குழந்தைகள் பள்ளி விட்டு வெளியில் செல்வதற்கும், அச்சத்துடன் தான் வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் வந்து வெளியில் சோதித்த பின் தான், மாணவியர் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு பல மாணவியர் படிக்கும் பள்ளிக்கு, அரசு பாதுகாப்பு வழங்காமல் இருப்பது மிகவும் அதிருப்தி ஏற்படுத்துகிறது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத வகையில், அரசு பள்ளிக்கு அருகில் இவ்வாறு 'குடி'மகன்கள் அட்டகாசம் செய்வதைகண்டித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

